முன்னதாக சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஏவப்பட்ட நிலையில் அந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது.மேலும் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ள நிலையில் அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.