ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்த அதானி! - அமெரிக்க குற்றப்பத்திரிக்கை தகவலால் அதிர்ச்சி!

Prasanth Karthick
வெள்ளி, 22 நவம்பர் 2024 (10:54 IST)

அதானி குழுமம் ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சூரிய ஒளி மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடி இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்றதாகவும், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேர் மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

 

இந்நிலையில் அமெரிக்க குற்றப்பத்திரிக்கையில், அதானியிடம் பணம் பெற்றவர்களின் பட்டியலில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரும் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது அதானி நிறுவன மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கினால் ரூ.1,750 கோடி தருவோம் என அதானி நிறுவனம் டீல் பேசியதாகவும், இதனால் மாநில அரசுக்கு ரூ.1.10 லட்சம் கோடி சுமை ஏற்படும் என தெரிந்தும், அதானி கொடுத்த பணத்திற்காக ஜெகன்மோகன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆந்திராவில் தற்போது கடும் சரிவை சந்தித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி மீது ஏற்கனவே மணல் மோசடி, மதுபான ஊழல் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்