ஆதாரிலும் ஊழல்: திருடப்பட்ட ஆதார் விவரங்கள்; அதிர்ச்சியில் மக்கள்!!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (12:42 IST)
உடைக்கவே முடியாத பாதுகாப்பு அம்சங்கள் உடையது என்று மத்திய அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது ஆதார் அட்டை. 


 
 
ஆனால் தற்போது முதல் முறையாக ஆதார் அட்டை விவர தகவல்கள் திருடப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் ஆதார் அட்டை சார்ந்த பல தனியுரிமை அம்சங்கள் மற்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மீது பல சந்தேக கேள்விகளும் அதிருப்தியும் எழுந்துள்ளது.
 
ஆக்சிஸ் வங்கி லிமிடெட், மும்பை அடிப்படையிலான சுவிதா இன்போசர்வ் மற்றும் பெங்களூரு சார்ந்த இமுதுரா ஆகிய நிறுவனங்கள் ஆதார் அட்டை உயிரி அளவீடுகளை சட்டவிரோதமாக சேமிக்கின்றன என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இம்மாதிரியாக அங்கீகரிக்கப்படாது சேமிக்கப்படும் ஆதார் உயிரியளவுகள் மூலம் ஆள்மாறாட்டம் மற்றும் பாதுகாப்புயின்மையை இது குறிக்கிறது.
 
அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசி கூறிவரும் நிலையில் ஆதார் எண் விவரங்கள் திருட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்