ஆதார் எண்ணை வெளியிட்டு சவாலா? குட்டு வைத்த ஆதார் அமைப்பு!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (15:55 IST)
சமீபத்தில் டிராய் இயக்குனர் ஆர்எஸ் சர்மா ஆதார் பாதுகாப்பானது என ஒரு பேட்டியில் பேசினார். அதன் பின்னர் தனது ஆதார் எண்ணை வெளியிட்டு, முடிந்தால் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுங்கள் என்று சவால் விட்டார். 
சவாலை ஏற்றுக்கொண்ட எலியாட் என்ற பிரான்ஸ் ஹேக்கர் அந்த ஆதார் எண்ணை பயன்படுத்தி, டிராய் இயக்குனரின் இரு மொபைல் நம்பர், அவரது வாட்ஸ் ஆப் டிபி, அவரது விலாசம், பிறந்த தேதி, பான் எண்ணையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். 
 
இந்நிலையில், ஆதார் அமைப்பு இதற்கு இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆதார் எண் என்பது மிகவும் தனிப்பட்ட முறையில் முக்கியமான தகவல்களை கொண்டு இருக்கிறது. இதனால் ஆதார் எண்ணை அங்கீகாரம் பெற்றவர்களிடம் மட்டுமே அளிக்க வேண்டும். 
 
ஆதார் விதி எண் 2006 மற்றும் ஐடி விதியின் படியும், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் தகவல் பாதுகாப்பு மசோதாவின் படியும் தனிப்பட்ட விவரங்கள், எண்களை பொதுவில் வெளியிட கூடாது. இது ஆதாருக்கும் பொருந்தும்.
 
எனவே, இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களும், பிற நபர்களை அந்த செயல்களை செய்ய வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்