தமிழகத்தில் விபத்துக்களால் நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க, தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கியது. அதேபோல், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.
ஆனால் ஹெல்மெட் அணியவில்லை என பொதுமக்களை மிரட்டும் போலீஸ்காரர்கள் பலர், ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் போடாமலுமே வாகனத்தை இயக்குகின்றனர் என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.