தனது கணவரை முதலையிடம் இருந்து மனைவி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் உள்ள மந்தராயல் என்ற பகுதியில் வசித்து வருபவர் பன்னெ சிங். இவர் தன் மனைவி விமல் பாயலுடன் வசித்து வருகிறார்.
பன்னே சிங் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து கொண்டு வரும் நிலையில் , ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக, பன்னே சிங் தன் மனைவி விமல் பாயுடன் சம்பல் ஆற்றுக்குச் சென்றார்.
அப்போது, பன்னே சிங் ஆற்றில் இறங்கியபோது, ஒரு முதலை அவரது காலை கடித்து இழுக்க முயன்றது.
அவரது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த விமல் பாய், முதலையிடமிருந்து கணவனின் காலை விடுவிக்க வேண்டி, ஒரு தடியால் முதலையை அடித்தார்.
பின்னர், முதலையின் கண்ணை குச்சியால் குத்தி கணவனை காப்பாற்றினர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: முதலை என் கணவரின் காலை கடித்தபோது, என் வாழ்க்கையைப்ப்பற்றி சிந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
விமலா பாயின் துணிச்சலை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.