திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானம் பறந்ததால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (12:37 IST)
ஏழுமலையான் கோவில் மேலே விமானம்  பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏழுமலையான் கோயில் மேலே விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ஏழுமலையான் கோவிலுக்கு மேலே விமானங்கள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏழுமலையான் கோவில் மேலே விமானம் ஒன்று பறந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: ‘’ஏழுமலையான் கோயில் மேலே விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்திற்கு எதிரானது… திருமலை வழியாக விமானங்கள் பறக்கக்கூடாது என விமானப் போக்குவரத்து துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

‘விமானப் போக்குவரத்து அதிகாரிகள்’’ திருமலை வழியாக விமானப் போக்குவரத்து தவிர்க்க முடியாதது’’ என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்