நீதிபதி முன்பு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட நபர்!

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (21:45 IST)
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன்பு ஸ்ரீனிவாஸ்  என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில், கர் நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி முன்பு கழுத்தில் கத்தியால் அறுத்தி ஸ்ரீனிவாஸ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
 
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதி அதிருப்தியடைந்தார். 
 
நீதிமன்றம் எண் 1 ல் பணியாளரிடம் ஆவணங்களை கொடுக்க ஸ்ரீனிவாஸ் உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.
 
நீதிமன்றத்திற்கு ஆயுதங்களை அவர் எப்படி  உள்ளே கொண்டு வந்தார் என்று விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்