நீ ரொம்ப குண்டா இருக்க..உனக்கு டைவர்ஸ் தான்: முத்தலாக் கூறி கம்பி எண்ணும் கணவன்

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:58 IST)
மத்தியபிரதேசத்தில் மனைவி குண்டாக இருப்பதாக கூறி கணவன் மனைவிக்கு முத்தலாக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்வது அம்மத வழக்கமாக இருக்கும் நிலையில் முத்தலாக் கூறினால் சிறை தண்டனை அனுபவிக்கக்கூடும் என நீதிமன்ற அதிரடியாக கூறியிருந்தது.
 
மத்தியபிரதேசத்தை சேர்ந்த சல்மா பானு என்ற பெண்ணிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளநிலையில் அவரது கணவனும் மாமியாரும் பானு குண்டாக இருப்பதாக கூறி அவரை டார்ச்சர் செய்துள்ளனர்.
 
பொறுத்து பொறுத்து பார்த்த பானு கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று பானு வீட்டிற்கு சென்ற அவரது கணவன் மற்றும் மாமியார் அவரை கடுமையாக தாக்கி குழந்தையை தூக்கி செல்ல முயன்றுள்ளார். ஆனால் பானு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அவரது கணவன், பானுவிற்கு முத்தலாக்(டைவர்ஸ்) கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
 
இதனையடுத்து பானு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததையடுத்து அவரது கணவன் மற்றும் மாமியாரை போலீஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்