கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் என்ற பகுதியை சேர்ந்த சாக்கம்மா என்ற பெண் நஞ்சுண்டசாமி என்பவரின் மனைவி. இவர்களுக்கு 7 வயதில் பிரபு என்ற மகன் இருந்தார். இந்த நிலையில் சாக்கமாவுக்கும் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும் கணவர் இல்லாதபோது இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாக்கம்மா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசமாக இருந்தபோது பள்ளியில் இருந்த வந்த பிரபு நேரில் பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி தாய், கள்ளக்காதலன் உதவியுடன் மகன் என்றும் பாராமல் அருகில் உள்ள ஏரியில் மூழ்கடித்து பிர்புவை கொலை செய்துவிட்டார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில் சாக்கம்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் காதலனுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்காக சொந்த மகனையே தாய் கொலை செய்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது