6 வயது மகளை சீரழித்த தந்தை: மத்தியபிரதேசத்தில் கொடூரம்

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:34 IST)
மத்தியபிரதேசத்தில் தந்தை ஒருவன் தனது 6 வயது மகளை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள அதிகரித்துக்கொண்டே போகிறது. பல இடங்களில் பிள்ளைகளுக்கு பெற்றோர்களாலேயே பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவது தான் கொடூரத்தின் உச்சமே.
 
மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்னர் அந்த நபரின் மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், அந்த பெண்மணி தனது சகோதரி வீட்டில் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்தார்.
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த நபர் தனது மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்று, தனது மனைவியிடம் நம் மகளை நன் பார்த்துக் கொள்கிறேன் என கூறி, 6 வயது மகளை தன்னுடன் கூட்டிச் சென்றுள்ளார். அந்த மனித மிருகம் பெற்ற மகள் என்றும் பாராமல்  சிறுமியை பல முறை நாசம் செய்துள்ளான்.
 
இதனை சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். பேரதிர்ச்சிக்கு ஆளான அவரது தாய் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் அந்த கொடூரனை போக்ஸோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்