இளைஞர் ஒருவரை பெண் ஒருவர் சரமாரியாத அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலமாக சோசியல் மீடியாக்களில் பேசி பழகி காதலில் ஈடுபடுவது, திருமணம் செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் சாதாரணமாக நடந்து வருகிறது. அதேபோல ஃபேஸ்புக், வாட்ஸப் மூலமாக பழக்கமாகி குற்ற செயல்களில் ஈடுபடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த சம்பவம் அப்படியான ஒரு வினோத சம்பவம்தான்.
இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவருடன் பழக்கமாகி இருக்கிறார். அந்த பெண்ணிடம் பேசும்போதெல்லாம் தான் பெரிய பணக்காரன் என்றும், கார், பங்களா வைத்துக்கொண்டு மில்லியன்களில் புரள்வதாகவும் கதையளந்து விட்டிருக்கிறார். அந்த பெண்ணும் இவர் சொன்னதை நம்பி அவருடன் காதலில் விழுந்திருக்கிறார்.
அந்த நபரோடு இருந்த காதலால் வீட்டில் பேசியிருந்த திருமணத்தையும் நிறுத்தியிருக்கிறார் அந்த பெண். சில நாட்களுக்கு பிறகுதான் தன் காதலன் தன்னிடம் பெரிய பணக்காரன் என்று சொன்னதெல்லாம் பொய் என்று தெரிய வந்திருக்கிறது. கோபமான அந்த பெண் தனக்கு தெரிந்த சிலரை அழைத்து கொண்டு அந்த இளைஞனின் வீட்டிற்கே சென்று விட்டார். கோபத்தின் உச்சத்தில் இருந்த பெண் அந்த இளைஞனை அடித்து, உதைத்து, துவைத்து எடுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
This guy created fake Instagram
Id to con this girl for money and wanted to flirt with her modesty. pic.twitter.com/hw8cfSlYiT