தற்போது நிர்வாக ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது ரயில்வே துறை. ரயில்வே பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தை ரயில்வே மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி-யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளது மத்திய அரசு.
இந்த பங்கு விற்பனை மூலம் 600 கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த பங்கு வெளியீட்டு பணிகளை ஐ.டி.ஐ.பி கேபிடல் மார்கெட் & செக்யூரிட்டிஸ், எஸ்பிஐ கேபிடல் மார்கெட்ஸ், எஸ் மார்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.