2021 சென்சஸ் பணிகளுக்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு? உள்துறை அமைச்சகம் தகவல்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:37 IST)
2021 சென்சஸ் பணிகளுக்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு?
ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை நாடு முழுவதும் சென்சஸ் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக சென்சஸ் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு சென்சஸ் எடுக்கப்பட உள்ளது
 
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் 2021 ஆம் ஆண்டு சென்சஸ் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு குறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து கருத்து கூறிய போது 2021 ஆம் ஆண்டு சென்சஸ் பணிகளுக்காக ரூபாய் 8254 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது நிதி ஒதுக்கி இதை அடுத்து விரைவில் சென்சஸ் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்