20% வாகனங்களால் மட்டுமே பிரச்சனை: பாஸ்டேட் குறித்து நெடுஞ்சாலை ஆணை!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:29 IST)
சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 
இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் நடைமுறைக்கு மாற இயலாது என்பதால் அவகாசம் வழங்கப்பட்டது. 
 
அனைத்து சுங்கசாவடிகளிலும் ஒரே ஒரு கட்டணம் செலுத்தும் திறப்பு மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஸ்டேக் மூலம் சுங்கசாவடி கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் சுங்கசாவடிகளை கடப்பதில் சிரமங்கள் எழுந்துள்ளது. 
 
பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு வழக்கமான சுங்க கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமான கட்டணம் பெறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். 
 
அதில், கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், வாடகை கார்கள் உள்ளிட்ட 80 சதவீதம் வாகன ஓட்டிகள் பாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டனர். மீதமுள்ள 20 சதவீத வாகனங்கள் மட்டும் இந்த முறைக்கு மாறவில்லை.
 
மேலும், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் விற்பனைக்கு தனியாக சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்