தீபாவளிக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ்: மகிழ்ச்சியில் ரயில்வே ஊழியர்கள்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (14:07 IST)
வரும் தீபாவளிப் பண்டிகைக்கு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வருடாவருடம் தீபாவளிக்கு அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த வருடமும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 
அதன்படி ரயில்வே துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை போனஸாக வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்தது. இதற்கு  மத்திய அமைச்சரவையும் தற்பொழுது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்