வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதில், இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த மாதம் 12 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார். அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பல தலைவர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட அவர் விரும்பம் தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்க முதல்வரும் பாஜகவுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அடுத்தாண்டு வரவுள்ள தேர்தலில் பாஜக மீண்டும் ஜெயிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மோடியே மீண்டும் பிரதமர் ஆக 49 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபல ஏபிபி என்ற செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில், 49 சதவீதம் மக்கள் மோடியே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதேபோல் 18 சதவீதம் மக்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர். யோகி ஆதித்யநாத்திற்கு 6 சதவீதமும், கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதமும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளது.