மொபைல் கடையை அடித்து நொறுக்கிய பெண்கள் (வீடியோ)

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (15:57 IST)
டெல்லியில் உள்ள மொபைல் கடை ஒன்றை மூன்று பெண்கள் ஆவேசமடைந்து அடித்து உடைத்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்றில் ஐந்து மாதங்களுக்கு முன் ஒரு பெண் மொபைல் போன் வாங்கியுள்ளார். அந்த போன் சரியாக இயங்கவில்லை என கடையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மொபைலுக்கு பதில் புதிய மொபைல் தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
புதிய மொபைல் மாற்றித் தருவதற்கு கடைக்காரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தன் அம்மாவை அழைத்து வந்த அந்த பெண் கடையில் உள்ளவர்களை தாக்கியுள்ளார். இவருடன் இன்னொரு பெண்ணும் சேர்ந்து கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினார். இதில் அந்த பெண்ணின் அம்மாவும் கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினார். இந்த சம்பவத்தை கடையில் இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
 
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் ஒரு பெண் ஓடிச் சென்று கடைக்காரரை வெறித்தனமாக தாக்குகிறார்.

அடுத்த கட்டுரையில்