இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:23 IST)
கொரோனா தடுப்பூசி 3 நாட்களாக போடப்பட்டு வரும் நிலையில் இதுவரை 3.8 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 3.8 லட்சம் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 3.8 லட்சம் என தெரியவந்துள்ளது.

இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 580 நபர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இவர்களில் ஏழு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஒருவர் இதய நோய் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மற்றவருக்கு உடற்கூறாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்