ஜூன் 1 முதல் 200 சிறப்பு ரயில்: பயணிகள் கவனிக்க வேண்டியவை என்ன?

Webdunia
வியாழன், 21 மே 2020 (15:38 IST)
ஜூன் 1ஆம் தேதி இந்தியாவில் பகுதியளவு ரயில் சேவைகளை தொடங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
 
நாடு இயல்பு நிலைக்கு திரும்ப விரைவில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதோடு பயணிகள் பின்பற்ற வேண்டிய சில புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு... 
 
வழக்கமாக இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் மறு அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து ரத்து. 
 
200 சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பயணங்களுக்கு அனுமதி கிடையாது.
 
தட்கல், பிரீமியம் தட்கல் முறைகளிலும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
 
GS ரயில் பெட்டிகளில் பயணிப்பதற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு 2S ரயில் பெட்டிக்கான கட்டணம் வசூலிக்கப்படும். 
 
பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவோ அல்லது திறன்பேசி செயலி வாயிலாகவோ மட்டுமே முன்பதிவு 
 
சிறப்பு ரயில்களில் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை மட்டுமே பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
 
பயணம் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டுகளை கொண்டுள்ளவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் நுழைய அனுமதி.
 
ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 90 நிமிடங்களுக்கு முன்னதாக பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வர வேண்டும்.
 
பயணிகள் முகக்கவசங்கள்/ முக மறைப்புகளை அணிந்திருப்பது கட்டாயம்.
 
பயணிகள் தங்கள் சொந்த உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
 
அனைத்து பயணிகளும் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
 
பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்னர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 
 
நோய் அறிகுறியற்ற பயணிகள் ரயிலில் நுழைய / ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
 
ரயிலில் பயணிக்க மறுப்பு தெரிவிக்கப்படும் பயணிகளுக்கு முழு பயணச்சீட்டு கட்டணமும் திரும்ப அளிக்கப்படும்.
 
சிறப்பு ரயில்களில் திவ்யாங்ஜன் சலுகையின் நான்கு பிரிவுகளுக்கும் 11 வகை நோயாளிகளுக்கும் சலுகை விலையில் பயணச்சீட்டு 
 
ரயிலுக்குள் துணி, போர்வைகள் மற்றும் திரைச்சீலைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்