நீட் தேர்வில் 11,000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்! அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 23 ஜூலை 2024 (08:53 IST)
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 11 ஆயிரம் மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த சில வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு விவகாரம் நிலையில் இந்த நீட் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

குறிப்பாக இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் வினாத்தாள் கசிவு உட்பட முறைகேடுகள் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகள் தேர்வு மையம் வாரியாக வெளியிட்டதில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மற்றும் அதற்கு குறைவான நெகட்டிவ் மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில்  மேலும் 9,400 பேர் மைனஸ் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மிகவும் குறைந்தபட்சமாக ஒரு மாணவர் மைனஸ் 180 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண்கள், அதே நேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதிய 11 ஆயிரம் மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்