பாலியல் புகார்; சிங்கப்பூரில் தமிழருக்கு 10 மாதம் சிறை

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (13:26 IST)
சிங்கப்பூரில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த  அன்பழகன் அங்குள்ள ஒரு மைனர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அவருக்கு  10 மாதம் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகன் (வயது 25) சிங்கப்பூரில் படித்து வருகிறார். மைனர் பெண் ஒருவர், தனக்கு செல்போன் வாங்கித்தருமாறு சமூக வலைத்தளம் ஒன்றில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனைப் பார்த்த அன்பழகன், தான் செல்போன் வாங்கித்தருவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு கைமாறாக தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்தித்துள்ளார். 
 
இச்செயல் அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வரவே, அவர்கள் அன்பழகன் மீது போலீஸீல் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அன்பழகன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்