நீதிமன்ற உத்தரவு ; 10 லட்சம் மதுக்கடை ஊழியர்களுக்கு வேலை காலி

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (18:26 IST)
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், நாடெங்கும் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


 

 
நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் கடைகள் வரை மூடப்பட்டன. இதனால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த் கூறியுள்ளார்.  இதன் மூலம் இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் மொத்தம் 5700 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டது. அதில் தற்போது 3,300 கடைகள் மூடப்பட்டன. எனவே குடிமகன்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 
 
எனவே, நெடுஞ்சாலையில் இருக்கும் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் அதிகாரிகளும், டாஸ்மாக் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால், குடியிருப்பு பகுதிகளில் கடையை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
எனவே, டாஸ்மாக் ஊழியர்களும், அதிகாரிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்