43 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
43 பயணிகளுடன் சென்ற தான்சானியா விமானம் ஒன்று திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிகிறது
இந்த நிலையில் ஏரியில் விழுந்த விமானத்தில் இருந்து இதுவரை 26 பேர் உயிருடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களையும் மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்கும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்தில் சிக்கியவர்களை முழுமையாக மீட்க மீட்பு துறையினர் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது