‘ஜுங்கா’ டிவிட்டர் விமர்சனம்

Webdunia
வெள்ளி, 27 ஜூலை 2018 (10:17 IST)
இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ள கருத்துகளை பார்ப்போம்.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் தான் ஜுங்கா. சாயிஷா  ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். 
 
தனது ஒவ்வொரு படத்திலும் தனது தனித் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜய் சேதுபதி. இந்த படத்தின் டீசரே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ளார்.
 
இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் போட்டுள்ள டிவிட்டர் கமெண்டுகளை இங்கே பார்ப்போம்.
படத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கலாம். கொடுக்கும் பணத்திற்கும், செலவிடும் நேரத்திற்கும் ஒர்த்தான படம். இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளது ஆச்சரியமில்லை. டைலாக்குகள் தாறுமாறு. கவலைகளை மறந்து சந்தோஷமாக படம் பார்க்கலாம்.
முதல் பாதி பார்த்து சிரிச்சே செத்துட்ட, செம்ம காமெடி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் பின்னிட்டாரு.
 
பிரவீன் விஜய் சேதுபதி கூட்டணி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பின் மீண்டும் கலக்கிவிட்டது. சிறப்பான திரைப்படம் இது. மகிழ்ச்சியாக பார்க்கலாம், இந்த கஞ்ச டானை மறக்கமுடியாது.
கோகுலின் திரைக்கதை, டார்க் காமெடி ரசிக்கும்படி உள்ளது. விஜய் சேதுபதி, யோகிபாபு கூட்டணி தாறுமாறு.. சேது அண்ணா டயலாக் டெலிவரி அல்டிமேட். பாட்டி மற்றும் சரண்யா மேடம் செம. படத்தை பார்த்து சிரித்து மகிழுங்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்