திருமணத்தை தாண்டி உறவு வைத்தால் மரணம்..? - "செவ்வாய் கிழமை" திரை விமர்சனம்!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (16:31 IST)
சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மாவுடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அஜய் பூபதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "செவ்வாய்கிழமை". இத்திரைப்படத்தில் பாயல் ராஜ்புத்,அஜ்மல்,ஸ்ரீலேகா,அஜய் கோஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.


 
அந்த ஊரில் திருமண உறவைத் தாண்டிய தவறான உறவை தொடர்பவர்களின் பெயர்கள்  ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒரு சுவரில் எழுதி வைக்கப்படுகிறது. சுவரில் பெயர் எழுதபட்டவர்கள்   மரணமடைகிறார்கள். இதனால்  அந்த ஊரில் பதற்றம் நிலவுகிறது.

நடக்கும் மரணங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தரப்பு விசாரணையில் இறங்குகிறது. இந்த மரணம் ஏன் நடக்கிறது இந்த மரணத்திற்கு யார் காரணம்  என்பது தான் படத்தின் கதை

அப்பாவால் கைவிடப்பட்டு பாட்டியின் அரவணைப்பில் வாழ்கிற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு தான் படிக்கும் கல்லூரி ஆசிரியரின் ஆசைக்கு தன் இளமையை விருந்தாக்கி, அவருடன் திருமண வாழ்க்கையில் இணைய முடியாமல் ஏமாற்றத்தை சந்திக்கிறார் பாயல் ராஜ்புத்.


 
அதன்பின் பல ஆண்களுடன் உறவுகொண்டு நடத்தை கெட்டவள் என ஊரில் பெயரைக் கெடுத்துக் கொள்கிற அளவுக்கு சிலர் செய்த சூழ்ச்சியால் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்பட்டு கல்லால் அடிபட்டு ரத்தக் காயங்களுடன் ஊரைவிட்டு துரத்தப்படுகிறார். ஆசிரியரின் விருப்பத்துக்கு உடன்படுகிற காம உணர்ச்சி, ஏமாற்றத்தில் ஏற்படும் விரக்தி என சிறப்பான நடிப்பை காட்டியிருக்கிறார் பாயல் ராஜ்புத்.

ஆசிரியராக வந்து பாயலின் இளமையை நயவஞ்சமாக வேட்டையாடுகிற அஜ்மல் தொடங்கி, பாயலின் பாட்டியாக வருகிற ஸ்ரீலேகா,நடிப்பு நம்மை மெய்சிலிர்க வைக்கிறது.

கதையின் மிகமிக முக்கியமான காதா பாத்திரத்தில் டாக்டராக வருகிறவர், மற்றும் ஜமீன்தாராக வருகிறவர், கதையோடு இணைந்து பயணிக்கிறார்கள். காமெடிக்கு அஜய் கோஷ் படத்தின்  கதையோட்டத்தைத்திற்கு கூடுதல் பலம்


 
சப் இன்ஸ்பெக்டராக வருகிற நந்திதா ஸ்வேதாவின்  அலட்டலான தன் நடிப்பு திறமையை காட்டியியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் கதையின் திருப்பத்துக்கு மிகமிக பொருத்தமாக இருக்கிறது ஜமீன்தாரின் மனைவியாக வருகிறவரின் தத்ருபமான நடிப்பு

காட்சிகளுக்கேற்றபடி மட்டுமில்லாமல், கதாபாத்திரங்களின் வசனங்களுக்கேற்பவும் பின்னணி இசையால் படத்துக்கு உயிரோட்டம் தந்திருக்கிறார் ‘காந்தாரா’ பட இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.

மொத்தத்தில் "செவ்வாய்கிழமை" திரைப்படம் ஆதரவு இல்லாமல் தவிக்கும்  ஒரு பெண்ணின் தவிப்பை கண் முன்னே நிறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்