பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடிச்சு நொறுக்க வரும் தமிழ் படம் - தயார் நிலையில் டீசர்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (09:52 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42 வது படத்தில் நடித்து வருகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின்  தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.
 
இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக பாலிவுட் இளம் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.  1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற திரைப்படங்களை தூக்கி சாப்பிடும் அளவுக்கு சூர்யா 42 திரைப்படம் இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். 
 
இப்படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா பிரியர்களும் ஆர்வத்தில் காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்