ஹங்கேரி நாட்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட்டில் 193 நாடுகள் பங்கேற்கும் நிலையில், இந்திய அணி வீரர்கள் வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஆடவர் பிரிவில், அமெரிக்காவை வீழ்த்தி, தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கியுள்ளது.
இன்று நடந்த பத்தாவது சுற்றில், இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியனோ கருவானாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
முன்னதாக, ஆடவர் அணி எட்டு சுற்றுகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒன்பதாவது சுற்றில் சமநிலை பெற்றது. பத்தாவது சுற்றின் முடிவில், இந்தியா 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதால், தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இன்று நடைபெறும் ஓபன் பிரிவில், இந்தியாவுக்கு தங்கம் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.