2 நாள் பெரிய சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

Siva
வெள்ளி, 1 மார்ச் 2024 (11:05 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சரிவை கண்ட நிலையில் முதலீட்டாளர்கள் ஏராளமான நஷ்டத்தை அடைந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் உயர்ந்து வரும் நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 654 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 157 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையால் அனுப்பி 198 புள்ளிகள் உயர்ந்து 22,187 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்த நிலையில் வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் அடுத்த வாரம் இன்னும் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடி பீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்