பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Siva

திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்ததால் லாபமடைந்து கொண்டிருந்த முதலீட்டாளர்கள் இன்று திடீரென பங்குச்சந்தை சரிந்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பொதுவாக ஏற்றத்தில் தான் அதிகம் இருக்கிறது என்பதும் அதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 791 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தை ஆனால் நிஃப்டி 98 புள்ளிகள் சரிந்து 22,125 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இனிவரும் நாட்களில் பங்கு சந்தை உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கோல்ட் பீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், ஐடி பீஸ், ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்