வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

Siva
திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:51 IST)
பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் முதல் நாளே பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்தது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 1300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், சற்று முன் வர்த்தகம் தொடங்கியபோது 250-க்கும் அதிகமான புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 261 புள்ளிகள் உயர்ந்து 84,811 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 25,904 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவதால், புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப பெறலாமா என்பது குறித்து பங்குச்சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்