இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

Siva
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (15:31 IST)
இன்று ஒரே நாளில் இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது, இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அமெரிக்கா பெடரல் வங்கி எடுத்த முடிவே இதற்கு காரணம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்த வாரம் முழுவதும் சுமாரான ஏற்றத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றம் செய்வதாக அறிவித்தது.

இதனால், இந்திய பங்குச்சந்தை உட்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும் என்று கணிக்கப் பட்டது. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1395 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு 'ஜாக்பாட்' ஏற்பட்டுள்ளது.

 அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று ஒரே நாளில் 398 புள்ளிகள் உயர்ந்து 25,814 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது.

வங்கி, நிதி சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர் சேவை நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கொண்டிருப்பதால், இதில் முதலீடு செய்தவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது."

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்