4 நாட்கள் தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றும் காளையின் பிடியில் சென்செக்ஸ்..!

Siva
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:32 IST)
கடந்த நான்கு நாட்களாக இந்திய பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாகவும் காளையின் பிடியில் பங்குச் சந்தை இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 178 புள்ளிகள் உயர்ந்து 83,356 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 25,959 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பங்குச் சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்கள் நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் உள்ளது. அதேபோல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்