ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:39 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை சரிந்த நிலையில் சற்றுமுன் பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து வருவதால் இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்றுமுன் 21 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 73 ஆயிரத்து 872 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி இன்று காலை சரிந்திருந்த நிலையில் தற்போது வெறும் இரண்டு புள்ளிகள் மட்டும் உயர்ந்து 22,408 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இன்று முழுவதுமே பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்பதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை தேர்தல் ரிசல்ட் வெளியானவுடன் உச்சம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்