வருடத்தின் கடைசி நாளில் குறைந்தது தங்கம்.. புத்தாண்டில் எப்படி இருக்கும்?

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:30 IST)
2024ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தங்கம் விலை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் புத்தாண்டில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாகவும் 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை உச்சத்துக்கு செல்லும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய்   7,110 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய்  56,880 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,756 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,048 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்