இன்றும் சரிந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (10:06 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது என்றும் ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 42,000க்கும் குறைவாக விற்பனை ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்றும் இன்னும் ஒரு சில வாரங்களில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றும் தங்கம் ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்துள்ளது. ரூபாய் 5235.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 41880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5597.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 44776.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் சரிந்து  ரூபாய் 70.90 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 70900.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்