தங்கம் விலை இன்றும் குறைவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Mahendran
சனி, 1 மார்ச் 2025 (10:28 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.20 ஒரு சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்
 
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ₹7,960 என விற்பனையான நிலையில் இன்று ரூ.20 குறைந்து 7,940 என விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் ₹63,680 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ₹160 குறைந்து ₹63,520என விற்பனையாகியுள்ளது.
 
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ₹ 8,662 என்றும், எட்டு கிராம் ₹69,296 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
நேற்று ஒரு கிராம் வெள்ளி ₹105 என விற்பனையான நிலையில், இன்று அதே விலையிலும் ஒரு கிலோ வெள்ளி ₹105,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.
 
தங்கம் விலை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த நேரத்தில் முதலீட்டுக்கு வாங்கி வைத்துக் கொள்வது நல்லது என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்