அதானியால் மீளவே முடியாத பங்குச்சந்தை.. மீண்டும் சென்செக்ஸ் சரிவு!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (09:43 IST)
அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஆராய்ச்சி நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக கடந்த வாரம் பங்குச்சந்தை படுவீழ்ச்சி அடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் நேற்று ஓரளவு பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது என்பதும் இதே ரீதியில் போனால் 59 ஆயிரத்துக்கும் கீழே சென்செக்ஸ் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 210 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 290 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 60 புள்ளிகள் சார்ந்து 17,590 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை பட்ஜெட் என்ற நிலையில் சென்செக்ஸ் உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்