தொடர்ந்து 3வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (09:43 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த இரண்டு நாளாக உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்று இந்திய பங்குச்சந்தை உயர்ந்துள்ளது. சற்றுமுன் இந்திய பங்குச் சந்தையின் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்ந்து 62905 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 18,648 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார தற்போது சீரடைந்து வருவதை அடுத்து அனைத்து பங்கு சந்தைகளும் உயர்ந்து வருவதால் இந்திய பங்குச்சந்தையும் உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் வருங்காலத்தில் நல்ல லாபத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்