அதானி பிரச்சனைக்கு பின் மீண்டும் ஏறுமுகத்தில் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (09:39 IST)
பிரபல தொழிலதிபர் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்த நிலையில் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன என்பதை பார்த்தோம். 
 
இதனால் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதானி பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது மீண்டும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 290 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதானி பிரச்சனையை அடுத்து மீண்டும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்