தங்கம் விலை வரலாறு காணாத உயர்ச்சி – ஒரு பவுன் 25 ஆயிரம் ?

Webdunia
ஞாயிறு, 27 ஜனவரி 2019 (17:07 IST)
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத அளவில் ஒரு பவுன் 25000 ரூபாயைத் தொட இருக்கிறது.

தங்கம் விலைக் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.24,968க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,121-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்விற்குக் காரணமாக சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் ஏற்றம் அதிகமாக இருக்கிறது.

சர்வதேச அளவில் டாலர் விலை குறைந்து, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. சராசரி அளவை விட சுமார் 30 சதவீதம் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்