சிவராத்திரியன்று நள்ளிரவு வழிபாடு ஏற்படுவதால் நற்பலன்கள் என்ன...?

Webdunia
சிவராத்திரியன்று நள்ளிரவு 11:30 மணி முதல் 1 மணி வரை ‘லிங்கோதபவர்’ காலமாகும் அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள்  நமக்கு கிடைக்கும். 
அந்த நேரத்தில் வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக  வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்  என்கின்றனர்.
 
சிவராத்திரி தனத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை  அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்கவேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்துவிட்டு,  உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் உணவு உண்ண வேண்டும்.
 
பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவன் கோவிலுக்குச் சென்று இரவைக் கழித்தும் சிவனை  வழிபடலாம்.
 
மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே  பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின்  மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்