பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலகரித்து நன்பகலில் குளித்து மலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்யவேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்தாலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் கூடுதல் உத்தமம்.
மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மசசரியத்தைக் கசைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிடவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.