முக்கிய வேட்பாளர்கள் :- மரகதம் குமரவேல்( அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) vs ஜி.செல்வம் ( திராவிட முன்னேற்ற கழகம் )
காஞ்சிபுரம் தொகுதியானது தமிழ்நாட்டில் உள்ள முக்கியத் தொகுதிகளில் ஒன்று.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 76 % மக்கள் வாக்களித்தனர்.காஞ்சிபுரம் தொகுதி பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர் ஆகும். காஞ்சிப்பட்டு மற்றும் நெசவுக்குப் புகழ்பெற்ற மாவட்டமாகும். தற்போது இங்குள்ள மக்கள் தொகை 1898119 ஆகும். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1619318. இதில் 794839ஆண்களும், 824316 பெண்களும் உள்ளனர்.
தற்போதைய தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல்,திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஜி.செல்வம் போட்டியிடுகின்றனர். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.மரகதம் எம்.பியாக உள்ளனார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான ஜி.செல்வத்தை 146866 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
[$--lok#2019#constituency#tamil_nadu--$]
தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும் , புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி, பாமக தர்மபுரி) ஆகிய தொகுதிகளில் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.