விசிக வேட்பாளருக்கு பிரசாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு : விழுப்புரத்தில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (13:11 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருபெரும் திராவிட கட்சிகள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களப்பணியாற்றி வருகின்றனர். 
மற்ற கட்சிகளும் தங்கள் பங்குக்கு அரசியல் களத்தில் போட்டியிடத் துணிந்துள்ளன.இதில் கமலின் மக்கள் நீதி மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் அடங்கும்.
 
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  விசிக கட்சியின் சார்பில்  விழுப்புரம் மக்களவைத் தொகுதில் உள்ள கோலியனூர் பகுதியில்  நேற்று இக்கட்சி யின் வேட்பாளரான ரவிக்குமார் வாக்குச் சேகரிக்கச் சென்ற போது  எதிர்ப்பு தெரிவித்து கல்வீசப்பட்டதில் ஒருவருக்கு தலையில் காயம்  ஏற்பட்டது.
 
மேலும் வேட்பாளருடன் சென்றவருக்கு கயல்வேந்தன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. பின்னர் காயம் அடைந்தவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து கல்வீச்சுக்குக் காரணமான 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்