அதிமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பங்குபெற்ற மக்கள் பிரியாணிக்கி அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமனற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பிற கட்சிகள் தங்களின் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை சமீபத்தில் அறிவித்தது. அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகமெங்கும் திமுக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அப்படி நேற்றும் திருவண்ணாமலை அதிமுக வேட்பளர் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்த கலசம்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 3.30க்கு வரவேண்டிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் 6 மணிக்கு வந்தனர்.
இதனால் கடும் பசியில் இருந்த மக்கள், மீட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே பிரியாணியை சாப்பிட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் பிரியாணிக்காக ஒருவரை ஒருவர் தாக்கி அடித்துக்கோண்டு சாப்பிட்டனர். ஒரு சிலர் சாப்பிட்டது பத்தாமல் பிரியாணியை பார்சல் செய்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு சென்றனர். இதனால் அந்த மீட்டிங்கே களோபரமாய் முடிந்தது.