அண்ணன் எடப்பாடியை முதல்வராக்கும் தேர்தல்! - அ.ம.மு.க வேட்பாளர் உளறல்!

Webdunia
செவ்வாய், 19 மார்ச் 2019 (08:36 IST)
அண்ணன் எடப்பாடியை முதல்வராக்கும் தேர்தல் இது என  சாத்தூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுப்பிரமணியன்  உளறியதால் அ.ம.மு.கவினரிடையே சலசலப்பை ஏற்பட்டது.
 
மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் , அ.ம.மு.க சார்பில் எஸ்.ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகிறார்.  இவர் சாத்தூரில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பிரசாரத்தை தொடங்கினார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் யாருக்கு ஓட்டு போட்டாங்க என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும். இந்தத் தொகுதி மக்கள் அ.ம.மு.க வேட்பாளரான என்னை நிச்சயம் வெற்றி பெறச் செய்வார்கள். நிச்சயம் நடக்கும். தமிழகத்தின் முதல்வர் அண்ணன் எடப்பாடியை முதல்வராக ஆக்க வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் இது. நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்றார்.
 
இதனிடையே அவர் தவறாக வாய் தவறி சொல்லிவிட்டாரே தவிர எடப்பாடியை ஆதரிக்கவில்லை என அப்போது அங்கிருந்த அ.ம.மு.கவினர் மறுப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்