இடுப்பில் சொறுகிய ரூ. 52 லட்சம் பணக்கட்டுகள் : மடக்கிப் பிடித்த பறக்கும் படை

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2019 (13:57 IST)
நாகர்கோவில் மாவட்டத்தில் இயங்கும் அரசு பேருந்தில் பயணித்த இருவர் இடுப்பில் பணத்தைச் சொருகியபடி ரூ. 52 லட்சத்தைக் கொண்டு சென்றனர்.  அப்போது அவர்களை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நெருங்கியுள்ளதால் தேர்தல நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அதனால் ரூ,.50000 க்கு மேல் யாரும் உரிய ஆவணமின்றி  பணத்தைக் கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதையும் மீறி தேர்தல அலுவலர்களின் கண்ணின் மண்ணைத் தூவிவிட்டு ஓட்டுக்கு பணம் கொடுக்க சிலர் முறைகேடாக பணத்தைப் பதுக்கிச் செல்வது நடந்தபடிதான் உள்ளது.
 
இந்நிலையில் நாகர்கோவில் மாவட்டத்தில் இயங்கும் அரசு பேருந்தில்  தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த தாசில்தார் சரஸ்வதி அதில் பயணித்தவர்களை சோதனைசெய்தார். 
 
இதில் கனகராஜ் தன் இடுப்பில் பணத்தைச் சொறுகியபடி ரூ.22.5 லட்சத்தைக் கொண்டு சென்றதை கண்டுபிடித்தனர். அதேபோல் ஹனீபா என்பவர் ரூ. 30 லட்சத்தை தன் இடுப்பில் மறைத்து சென்றதையும் கண்டுபிடித்தனர். ஆனால் இதற்குரிய ஆவணம் எதையும் கனகராஜ் கொடுக்காததால்  பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்து இருவரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்