ஓட்டுக்கு காசு கொடுப்பதா.? அரசியலை விட்டு சென்றிடுவேன்..! உணர்ச்சி பொங்கிய சீமான் ..!!

Senthil Velan
வெள்ளி, 29 மார்ச் 2024 (15:38 IST)
காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை வந்தால், அரசியலை விட்டு வெளியேறி விவசாயம் செய்ய சென்றிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சி பொங்க பேசினார்.
 
மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டிட்டுள்ள நாம் தமிழர் கட்சி, 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தென்காசியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,100, 150 கோடி கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலைக்கு நாங்கள் இல்லை என்றும் அப்படிப்பட்ட ஒரு அரசியல் செய்ய வேண்டிய நிலை வந்தால் அரசியலை விட்டு விட்டு விவசாயம் சென்று விடுவேன் என்றும் தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி மலர செய்ய வேண்டும் என்கிற மாபெரும் கனவோடு தான் அரசியல் களத்தில் நிற்பதாகவும் அவர் கூறினார்.

ALSO READ: பிரதமரிடம் சரணாகதி..! திமுக இரட்டை வேடம்..!! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!
 
இந்த நிலத்தில் நாம் அடிமை பட்டுள்ளதாகவும், நமக்கென்று எதுவும் இல்லை என்றும் ஆளுகின்றவர்கள் நம்மளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் சீமான் வேதனை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்