முன்னாள் முதல்வரை விட மக்கள் பத்து மடங்கு அறிவாளிகள் - அண்ணாமலை விமர்சனம்

J.Durai
செவ்வாய், 26 மார்ச் 2024 (12:28 IST)
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட புளியகுளம் பகுதியில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கோவை தெற்கு தொகுதியில் தனி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும்  கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணமான தொகுதி என்றும் கூறினார்.
 
இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் எனவும் மீண்டும் 3 வது முறையாக பிரதமர் மோடி வருவார் என தெரிந்த தேர்தல் தான் இது என்றும்  ஜூன் 4ம் தேதி அரசியல் புரட்சி ஏற்பட உழைத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார். 
 
நம்மை மூன்றாம் அணி என்று செல்லியவர்கள் மத்தியில் முதல் அணியாக வரும் என்பதை காண்பிக்க வேண்டும் எனவும் 1999 ல் பாஜக வென்றது போன்று மீண்டும் வெல்ல போகிறது, 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெற்றி பெற போகின்றது என மேற்கோள் காட்டினார். பாஜக எம். பி கள் உள்ள பகுதிகள் அனைத்தும் வேகமாக வளர்ந்து வருவதாகவும்  கோவை என்றாலே நாகரீகமான கலாசாரம் மற்றும் அதிக அளவில் கல்லூரிகள் உள்ள பெருமை உள்ளதாகவும்  வளர்ச்சியை தடுப்பதற்காக 10 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்து சென்றனர் மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் எம். பி என்றும் குற்றம் சாட்டினார். 
 
திமுக தமிழகத்தில் 33 மாதங்களாக என்ன செய்தார்கள் என்று சொல்லாமல் மீண்டும் தேர்தலை சந்திக்க வருவதாகவும்  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை நிறுத்தி விடுவதாக சொல்லுகிறார்கள் ஆனால் 30% பெண்களுக்கு மட்டுமே உரிமை தொகை வருகிறது எனவும் குற்றம் சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவார்கள் என கூறுவதாகவும் தற்போது 30 சதவீதம் மகளிருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அதையும் நிறுத்தி விடுவார்களாம் எனவும் கூறியதுடன்  நாங்கள் 1500 ரூபாயாக உயர்த்தி கொடுக்கிறோம் இன திமுக ஒரு புறம் கூறுவதாகவும் இன்னொரு கட்சி 3 ஆயிரம் கொடுப்போம் என கிளம்பி வருகிறார்கள் தினமும் விமர்சித்தார்.
 
முன்னாள் முதலமைச்சரை விட 10 மடங்கு மக்கள் அறிவாளிகள் எனவும் அதுவும் கோவை மக்கள் அறிவு நிறைந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.திமுக ஆட்சிக்கு வந்து  33 மாதமாகியும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்னாச்சு?? எனவும் திமுக கொடுக்க வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று எனவும் காதில் பூ சுற்றி காதில் சங்கு வைத்து ஊதினாலும் கேட்காதது போன்று இருப்பார்கள் என்றும் காட்டமாக பேசினார்.மக்களை முட்டாளாக மாற்றவே நினைக்கிறார்கள் எனவும் மோடி நாட்டுக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறார், மக்களுக்குகாக சுயநலம் இல்லாத அளவிற்கு ஒரு பிரதமரை நாடு பார்த்து வருகிறது என்றும் கூறிய அவர், நல்ல கணக்கு வாத்தியரை போன்று மோடியை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உங்கள் கையில் பவர்புள்ளான செல்போன் என்கிற ஆயுதம் உள்ளதால் அலைபேசியில் உள்ள எண்களுக்கு 3 முறை பேசி வாக்கு கேட்க வேண்டும் எனவும்  டிவி சீரியல், பேப்பர் படிக்கும் நேரம், பேருந்தில் போகும் நேரம் போன்ற நேரங்களில் பேசுங்கள்  தாமரைக்கு வாக்கு செலுத்த சொல்லுங்கள் எனவும் எந்த கட்சியாக இருந்தாலும் சரி பேசமால் இருந்து விடாதீர்கள் , பக்கத்து வீடுகளுக்கு சென்று 10 நிமிடங்கள் பேசுங்கள்,அக்கா, அண்ணே, தம்பி என்று பேசுங்கள் என்றும் ஆலோசனை வழங்கினார். திமுக அரசை பொருத்தவரை கோபாலபுரத்தில் வந்தால் மட்டும் தான் கணக்கில் வரும் பட்ஜெட்டிற்கு கொடுக்கும் பணத்தை வைத்து திமுக போலி பிரச்சாரம் செய்கிறது எனவும் கூறினார். கோவையின் வெற்றி மக்களின் வெற்றியாக மாற வேண்டும் எனவும் நமக்காக 10 ஆயிரத்து 530 பேர் அரசியல் வாசம் இல்லாதவர்கள் பாஜகவிற்காக  மாற்றத்திற்காக வந்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்